சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக சண்டிகரில் வரும் 29ம் தேதி முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.’

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந் நிலையில் சண்டிகரில் மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை பகுதிநேர பொதுமுடக்கத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. பொது முடக்கத்தின் போது உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாக்களில் 50 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]