டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மே 1 வரை அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு அலுவலகங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்யாவசிய சேவைகளை தவிர்த்த அரசு அலுவலகங்களை மே 1ம் தேதி வரை மூட மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. முழுமையான ஊரடங்கு விதிக்குமாறு அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தியுள்ளனர்.

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4001 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.