டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் selfregistration.cowin.gov.in/register என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி சிறப்பாக பணியாற்றி வருவதால், அதை எடுத்துக்கொள்ள மக்களிடையே ஆர்வம் மிகுதியாகி வருகிறது. இதன் காரணமாக, தடுப்பூசி போடும் பயங்களில், ஏராளமானவர்கள் குவிய வாய்ப்பு இருப்பதால், இணையதளம் மற்றும் அதற்குறிய செயலி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது apisetu (ஆரோக்ய சேது) செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
18 வயதை கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவு செய்து கொள்பவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வேண்டும்.
ஒரே செல்போன் நம்பரை பயன்படுத்தி நான்கு பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனி புகைப்பட அடையாள அட்டைகள் அவசியம்.
பதிவு செய்யும்போது அவரவர் விருப்பப்படும் மையத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.