அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பெங்களூரு அணி, 10 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை சேர்த்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில், இன்னும் கேப்டன் விராத் கோலி ஏமாற்றினார். அவர், வெறும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தேவ்தத், 14 பந்துகளில், 17 ரன்கள் அடித்து அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் 20 பந்துகளில், 25 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். தற்போது டி வில்லியர்ஸ் உடன், பட்டிடார் ஆடிவருகிறார்.

இன்றைய ஆட்டம், இரு அணிகளுக்குமே முக்கியமான ஆட்டமாகும். பெங்களூரும் டெல்லியும், இதுவரை ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளன. ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி, சூப்பர் ஓவரில் வென்றது.