தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ  தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,771 போ் உயிரிழந்துள்ளனா்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் முன்வந்துள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ  தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது.

இது குறித்து அந்நாட்டு அதிபர் டசாய் இங் வென் கூறி இருப்பதாவது:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு இந்த கடினமான சூழலில் தைவான் அரசு உடன் நிற்கிறது.

இக்கட்டான சூழலில் தைவான் அரசு இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுவரை பிரான்ஸ், ரஷியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.