இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வந்த நேரடி பயணிகள் விமான சேவை மே 15ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை உச்சம்பெற்றுள்ளது. மேலும் மருந்து,ஆக்சிஜன் தட்டுப்பாடுகளால் உயிரிழப்பும்அதிகரித்துள்ளது. ஒருநாள் பாதிப்பில் இந்தியா கடந்த ஒரு வாரமாக முதலிடத்தில் தொடர்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு வருகின்றன.
தொற்றின் தீவிர பாதிப்பு காரணமாக, இந்தியாவுடனான விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக மீண்டும் நிறுத்திவைத்துள்ளது. ஹாங்காங், ஈரான், துபாய் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பயணிகள் விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தத் தடையை வெளியிட்டுள்ளார்.