மதுரா
மதுரா நகர் மருத்துவமனையில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அது குறித்துப் பதிவு செய்யக் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் அங்கு சென்றார். அவர் அப்போது உபி அரசு காவல்துறையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மோடி அரசின் அமைச்சர்கள் வலது சாரி பத்திரிகையாளர் அர்னாப் கைதின் போது கண்டனம் தெரிவித்த போதும் இது குறித்து ஏதும் சொல்லவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அன்று சித்திக் கப்பன் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெலியாகின. மேலும் அவர் 21 ஆம் தேதி அன்று மதுரா நகர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது முதல் இதுவரை அவர் உடல்நிலை குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவருடைய மனைவி உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி என் வி ரமணாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கடந்த 20 ஆம் தேதி சிறை குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா உறுதி செய்யபடதால் 21 ஆம் தேதி அன்று அவரை மதுரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தனது கணவரை மருத்துவமனை கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரால் கடந்த 4 நாட்களாக உணவருந்தவோ கழிப்பறைக்குச் செல்லவோ இயலாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எடுத்து அவரை விடுவிக்கவில்லை என்றால் சித்திக் மரணமடையக் கூடும் என அவர் மனைவி அச்சம் தெரிவித்துள்ளார்.