டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 3,48,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சமாக 3,48,979 பேர் அதிகரித்து மொத்தம் 1,69,51,769 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,761 அதிகரித்து மொத்தம் 1,92,310 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,35,803 பேர் குணமாகி  இதுவரை 1,40,78,081 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 26,74,287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 67,160 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,28,836 ஆகி உள்ளது  நேற்று 676 பேர் உயிர் இழந்து மொத்தம் 63,928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 63,618 பேர் குணமடைந்து மொத்தம் 34,68,610 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,94,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 26,685 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,77,187 ஆகி உள்ளது.  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,067 பேர் குணமடைந்து மொத்தம் 11,73,202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,98,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 29,438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,04,397 ஆகி உள்ளது  இதில் நேற்று 208 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,058 பேர் குணமடைந்து மொத்தம் 10,55,612 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,34,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 14,842 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,66,329 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,142 பேர் குணமடைந்து மொத்தம் 9,52,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.1

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 37,944 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,51,314 ஆகி உள்ளது.  நேற்று 222 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,959 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,231 பேர் குணமடைந்து மொத்தம் 7,52,211 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,88,144 பேர் சிகிச்சையில் உள்ளனர்.