
மும்பை: இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தருகின்ற மனநலப் பயிற்சியானது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது என்று வெளிப்படையான பாராட்டு தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
தலைமைப் பயிற்சியாளரின் அந்த திறன், நம்ப முடியாத ஒன்று என வர்ணித்துள்ளார் கவாஸ்கர்.
நெருக்கடியான நிலையிலும், இளம் வீரர்களுக்கு சரியான உற்சாகத்தை அளிக்கிறார் சாஸ்திரி என்றுள்ளார் அவர்.
கவாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயிற்சிக்குப் பிறகு, ரவி சாஸ்திரியின் அருகில் ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் இருந்தால் போதும். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, அதிகளவு நம்பிக்கையை, மனவலிமையை, தன் வார்த்தைகளின் மூலம் அளிக்கும் ரவியின் நம்பமுடியாத திறனை நீங்கள் கண்டுகொள்ளலாம்.
ஒரு இளம் வீரரின் திறமை மற்றும் அறிவை ரவிசாஸ்திரி கண்டுகொண்டுவிட்டால், அந்த குறிப்பிட்ட வீரருக்கு, ரவியைப்போல் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் ஒருவரைப் பார்க்க முடியாது.
அவர் உங்களை திட்டலாம் அல்லது முகத்தைக் காட்டலாம்; ஆனால், நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வார்த்தைகள் அவரிடமிருந்து கிடைத்துவிடும்” என்றுள்ளார் கவாஸ்கர்.
[youtube-feed feed=1]