லண்டன்: முழங்கையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால், நடப்பு ஐபிஎல் தொடரில், பாதியிலிருந்து பங்கேற்பார் என்று முன்னரே கூறப்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், தற்போது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாவது, “ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், பந்துவீச்சுப் பயிற்சியாளர் லூயிஸ் ஆகியோருடன் சேர்ந்து ஆர்ச்சர் தொடர்ந்து பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட உள்ளார்” என்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து, முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது ஆர்ச்சரும் விலகியுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெருத்த ஏமாற்றமாகவும் பின்னடைவாகவும் அமைந்து போனது.

கடந்த ஐபிஎல் தொடர்களில், ஜோப்ரா ஆர்ச்சர், ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]