அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கைப்பற்றியது. விக்னேஷ் சிவன் – அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

ஆக்‌ஷன் படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வித்தியாசமான டிரெய்லரை ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார். அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா நடிக்கும் மணிமாறன் கேரக்டர் ஒரு வசனக் குறிப்புடன் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]