தமிழ்நாட்டில், ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல தடைகள் அமலில் இருந்துவரும் நிலையில், வரும் 26ம் தேதி முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மூடப்படுதல், ஓட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி மறுப்பு, திரையரங்குகள் மூடுதல் உள்ளிட்ட புதிய பல கட்டுப்பாடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழ்நாட்டில் விரைவில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கடந்தாண்டில், எடுத்தவுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது சிறிதுசிறிதாக கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு, முழு அடைப்பை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன.

பேருந்துப் பயணம், இதர வாகனப் பயணங்கள் தொடர்பான தடைகளை அறிவிக்க வ‍ேண்டியது மட்டும்தான் இனி பாக்கி என்ற நிலை உள்ளது.