சென்னை: தமிழகத்தில் மேலும் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ளது. இதனால், தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்றைய பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இன்று 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இன்று 9,142 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மேலும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 39 பேர் அரசு மருத்துவமனையிலும் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 4,086 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,05,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,18,80,174 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,25,718 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,00,668 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 263 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 194 உள்ளன.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 33
செங்கல்பட்டு 1,163
சென்னை 4,086
கோவை 1,004
கடலூர் 205
தர்மபுரி 182
திண்டுக்கல் 269
ஈரோடு 392
கல்லக்குறிச்சி 77
காஞ்சிபுரம் 454
கன்னியாகுமரி 224
கரூர் 119
கிருஷ்ணகிரி 319
மதுரை 596
நாகப்பட்டினம் 113
நாமக்கல் 216
நீலகிரி 84
பெரம்பலூர் 19
புதுக்கோட்டை 93
ராமநாதபுரம் 105
ராணிப்பேட்டை 248
சேலம் 490
சிவகங்கை 91
தென்காசி 160
தஞ்சாவூர் 310
தேனி .137
திருப்பத்தூர் 110
திருவள்ளூர் 793
திருவண்ணாமலை 377
திருவாரூர் 163
தூத்துக்குடி 388
திருநெல்வேலி 525
திருப்பூர் 316
திருச்சி 302
வேலூர் 305
விழுப்புரம் 205
விருதுநகர் 168
