டெல்லி:  கொரோனா தொற்று காரணமாக,  மக்கள் தடுப்பூசி இல்லாமலும், ஆக்சிஜன் ,  ஐசியு கிடைக்காமலும் திண்டாடி வரும் நிலையி,ல், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற செயலகக் கட்டடத்துக்கு மோடி அரசு டெண்டர் விட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா 2வது அலை பரவலால் மக்கள் சொல்லானா துயரத்துக்கு ஆளாகி வருகின்றன.  தொற்று பாதிப்பால் பலியானவர்களின் உடல்களை எரியூட்ட அவர்களது உறவினர்கள் வரிசையில் நிற்கும் காட்சிகள் பலரையும் கலங்கச் செய்துள்ளது.

மக்களுக்கு தேவையான கு ஆக்சிஜன் வசதிகள் கூட இல்லாத நிலையில் அரசுக்கு புதிய கட்டடத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்னுரிமை அளிப்பதா என கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி லுட்யன்ஸ் பகுதியில், குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பகுதியில், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களின் அலுவலகம் ஆகிய இடம்பெறவுள்ளன.

அவற்றின் ஒரு பகுதியாக புதிதாக மைய தலைமையகத்திற்கு ரூ.3408 கோடி மதிப்பில் 3 கட்டடங்கள் கட்டுவதற்கான ஏலத்திற்கு மோடி அரசு அழைப்பு விடுத்த்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான பத்திரிகையையும் இணைத்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

 கொரோனா நெருக்கடி,

 சோதனை இல்லை,

தடுப்பூசி இல்லை,

ஆக்ஸிஜன் இல்லை,

ஐசியு இல்லை …

இதற்கு மத்தியில் மத்திய விஸ்டா திட்டத்தை முன்னெடுப்பதில்  மோடி அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது. மத்திய செயலகக் கட்டடத்துக்கு டெண்டர் விட்டிருக்கிறது மோடி அரசு ,  அதற்குதான் முதலிடம் அளித்துள்ளது மோடி அரசு என்று கடுமையாக சாடியுள்ளார்.