டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது  அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேருக்கு பாதிப்பு கண்டறிப்பட்டு உள்ளதாகவும் 2,624 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 9 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி  கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 புதிய கொரோனா  வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,66,10,481 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  2,624  பேர் பலியான நிலையில், இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,89,544 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும்  2,19,838 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை  1,38,67,997 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  25,52,940 பேர்.

நாடு முழுவதும் இதுவரை  13,83,79,832 பேருக்கு தடுப்பூசி போடப்பபட்டுள்ளது.