டில்லி
நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சமாக 3,15,552 பேர் அதிகரித்து மொத்தம் 1,59,24,806 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,101 அதிகரித்து மொத்தம் 1,84,672 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்று 1,79,407 பேர் குணமாகி இதுவரை 1,34,49,406 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 22,84,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு சரியான சிகிச்சை கண்டறியப்படாததால் பரிசோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய முறை தற்போது உலகெங்கும் நடைமுறையில் உள்ளன. அவ்வகையில் இந்தியாவிலும் தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 27,27,05,103 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.