டில்லி

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா டில்லி சட்டப்பேரவையில் 1,2,3 மற்றும் 4 ஆம் சட்டப்பேரவைகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.  இவரைச் சுருக்கமாக ஏ கே வாலியா என அழைப்பது வழக்கமாகும்.  இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் தொடர்ந்து 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.  இவர் டில்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2008 முதல் 2013 வரை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.    இவர் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி, நிலம் மற்றும் கட்டுமான துறைகளை நிர்வகித்து வந்தார்.

அசோக் குமார் வாலியாவுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதால் இவர் டில்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.  இவருக்கு தற்போது 72 வயதாகிறது.