டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,15,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சமாக 3,15,552 பேர் அதிகரித்து மொத்தம் 1,59,24,806 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,101 அதிகரித்து மொத்தம் 1,84,672 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,79,407 பேர் குணமாகி  இதுவரை 1,34,49,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 22,84,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 67,448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,27,827 ஆகி உள்ளது  நேற்று 568 பேர் உயிர் இழந்து மொத்தம் 61,911 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 54,985 பேர் குணமடைந்து மொத்தம் 32,68,449 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,95,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 22,414 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,95,060 ஆகி உள்ளது.  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,001 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,431 பேர் குணமடைந்து மொத்தம் 11,54,102 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,35,630 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 23,568 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,22,202 ஆகி உள்ளது  இதில் நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,762 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,412 பேர் குணமடைந்து மொத்தம் 10,32,233 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,76,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 11,681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,25,059 ஆகி உள்ளது  இதில் நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,258 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,071 பேர் குணமடைந்து மொத்தம் 9,27,440 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.1

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,716 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,86,703 ஆகி உள்ளது.  நேற்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,510 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,359 பேர் குணமடைந்து மொத்தம் 9,18,985 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.