மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், பிரமாதமாக பேட்டிங் செய்து, 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.
டூ பிளசிஸ், 60 பந்துகளில் 95 ரன்களை அடித்து, கடைசிவரை நாட்அவுட்டாக இருந்தார். அவர் 4 சிக்ஸர்கள் & 9 பவுண்டரிகளை வெளுத்தார். ருதுராஜ் அடித்த 64 ரன்களில், 4 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் அடக்கம்.
மொயின் அலி அடித்த 25 ரன்களில் 2 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகள் அடக்கம். இந்தமுறை, திடீரென நான்காவது வீரராக களமிறங்கிய தோனி, 8 பந்துகளில் 17 ரன்களை(1 சிக்ஸர் & 2 பவுண்டரி) அடித்து வெளியேறினார். 5வது விக்கெட்டாக வந்த ஜடேஜா, கடைசிப் பந்தை மட்டுமே சந்தித்து 1 சிக்ஸர் அடித்து அசத்தினார்.
முடிவில், 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த சென்னை அணி, 220 ரன்களைக் குவித்து, கொல்கத்தாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா பவுலர்களிலேயே, பேட் கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட்கூட எடுக்காமல், 58 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கூடுதலாக 13 ரன்களை வழங்கியது கொல்கத்தா அணி.