திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,95,060 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,001 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,431 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,54,102 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,35,630 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 33,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,42,511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 187 பேர் உயிர் இழந்து இதுவரை 10,346 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 14,198 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,89,900 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,42,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.