மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது சென்னை அணி.
மும்பையில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், சென்னை அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அணியில், பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி இடம்பெற்றுள்ளார்.
தற்போது, கெய்க்வாடும், டூ பிளசிஸும் ஆடிவருகின்றனர். கடந்த போட்டிகளில், தொடர்ந்து சொதப்பி வந்த கெய்க்வாட், இன்றாவது உருப்படியாக எதையாவது செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டூ பிளசிஸ், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவருகிறார். சென்னை அணி, கடந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வென்றது. எனவே, இன்றும் வெல்ல வேண்டுமென்பது, சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போதைய நிலையில், சென்னை அணி, 4 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை சேர்த்துள்ளது.