சென்னை: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியை, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, நடப்பு ஐபிஎல் தொடரில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து, 19.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே சேர்த்து.
பின்னர், எளிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் வார்னர் 37 பந்துகளில் 37 ரன்களை சேர்த்து கைகொடுத்தார்.
பின்னர், பேர்ஸ்டோ, 56 பந்துகளில், 63 ரன்களை அடித்து வெற்றியை உறுதிசெய்தார். பின்னர், இந்தப் போட்டியில் முதன்முறையாக வாய்ப்பு பெற்று, மூன்றாவது வீரராக களமிறங்கிய வில்லியம்சன் 19 பந்துகளில் 16 ரன்களை அடித்தார்.
இதன்மூலம், 18.4 ஓவர்களிலேயே, 121 ரன்களை எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஐதராபாத் அணி.