டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2023 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேறறு 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 14 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 1,619 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2023 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதுபரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உயிரிப்பு என்பது 1.18 சதவீத அளவில் தான் இருக்கிறது.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் குணம் அடைந்த நிலையில், நேற்று 1,67,457 பேர் குணமடைந்திருப்பதுடன், இதுவரை 1,32,76,039 பேர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பை தடுக்கும் வகையிலான கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 13,01,19,310 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,90,197 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
‘