லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எழுச்சி, மிரட்டல் விடுப்பதாய் உள்ளது என்றும், இதை மற்ற அணிகள் உணர வேண்டுமெனவும் கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்.

சென்னை அணி, தனது கடைசி 2 லீக் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை வீழ்த்தியது. கடந்த தொடரைப் போலன்றி, தனது பழைய ஃபார்முக்கு அந்த அணி திரும்பிவிட்டதைப் போலவே இருந்தது.

இந்நிலையில் மைக்கேல் வாகன் கூறியிருப்பதாவது, “சிஎஸ்கே அணிக்கு கடந்தாண்டு சரியாக அமையவில்லை. எனினும் இந்தாண்டு, இந்தியாவில் சிறப்பாக ஆடுகிறது. இதனால் புள்ளிப்பட்டியலில், தற்போதைய நிலவரப்படி டாப் 4 இடங்களில் 2வது இடத்தில் உள்ளது அந்த அணி. சென்னை அணியுடன் முதல் இடத்தில் ஆர்சிபி, 3வது இடத்தில் மும்பை மற்றும் 4வது இடத்தில் டெல்லி அணிகள் உள்ளன.

சென்னை அணியின் இந்த கம்பேக் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4ல், மீதமுள்ள 3 அணிகளில் நான் இருந்திருந்தால் இதனை தான் நினைத்திருப்பேன். எனவே, மற்ற அணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றுள்ளார் மைக்கேல் வாகன்.