மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்னை நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில், ஜோஸ் பட்லர், அதிகபட்சமாக 49 ரன்களை அடித்தார். அதற்கடுத்து, ஜெய்தேவ் உனாட்கட் 24 ரன்களை அடித்தார். ராகுல் டெவாஷியா 15 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
கடைசியாக, சேட்டன் சகாரியாவும், முஸ்தபிசூர் ரகுமானும் களத்தில் இருந்தனர்.
சென்னை தரப்பில், தீபக் சஹாரை தவிர்த்து, மற்ற அனைத்து பெளலர்களுமே சிறப்பாக பந்து வீசினர். அதில், மொயின் அலிதான் மிக அருமையாக வீசினார். மொத்தம் 3 ஓவர்களில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிராவோ மற்றும் ஷர்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஜடோஜாவைப் பொறுத்தவரை, 4 ஓவர்களில், 28 ரன்களைக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை எடுத்ததுடன், மொத்தம் 4 கேட்சுகளைப் பிடித்து, மொத்தமாக, 6 பேர் ஆட்டமிழப்பதற்கு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.