
மும்பை: சென்னை அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணியில், துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கியுள்ளார். எனவே, இவருக்கு விரைந்து கடிவாளம் போட்டாக வேண்டிய நிலையில் சென்னை அணி உள்ளது.
தற்போதைய நிலையில், ராஜஸ்தான் அணி, 10 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து, 81 ரன்களை எடுத்துள்ளது சென்னை அணி. வெற்றிக்கு, 60 பந்துகளில், 108 ரன்களை எடுத்தாக வேண்டும்.
ஜோஸ் பட்லர், 32 பந்துகளில், 48 ரன்களை அடித்துள்ளார். அதில் 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகள் அடக்கம். மனான் வோரா 14 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது, பட்லருடன், ஷிவம் துபே களத்தில் நிற்கிறார்.
Patrikai.com official YouTube Channel