ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்கிறது.
நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. நாள்தோறும் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. இந் நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர் ராவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
[youtube-feed feed=1]