புதுடெல்லி: தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு, வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை விதித்துள்ளது மத்திய அரசு.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டில், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகிவரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்களில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது.

எனவே, தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு ஏப்ரல் 22ம் தேதி முதல் தடைவிதித்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக அடுத்த உத்தரவு வரும்வரை, இந்த தடை உத்தரவு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.