டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இந்த பிரச்னைகளை தவிர்க்க ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே துறை தெரிவித்துள்ளதாவது:
இதுவரை 4002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.