சென்னை: ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் ஆடிவரும் மும்பை அணி, நிதானமாக ஆடிவருகிறது. அந்த அணி, 12 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

கேப்டன் ரோகித், 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தற்போது குவின்டன் டி காக் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்துள்ளவர் இஷான் கிஷான்.

மும்பை அணி, இதற்குமுன் தான் ஆடிய 2 போட்டிகளிலும், சொல்லிக்கொள்ளும் வகையில் ரன் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் அணியில், கடந்த 2 போட்டிகளில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் நடராஜன் இன்றையப் போட்டியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அபிஷேன் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

[youtube-feed feed=1]