மும்பை: கோவாக்சின் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் அனுமதி, மும்பையில் செயல்படும் ஹாப்கின் இன்ஸ்டிட்யூட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஹாப்கின் நிறுவனத்திற்கு, தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் அனுமதியை, மத்திய அரசு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு, கோவாக்சின் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவாக்சின் தடுப்பு மருந்தை, தற்போதுவரை, பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.