
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதாவது:
”அந்நியனை இந்தியில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற திறமையான, கவர்ந்திழுக்கக் கூடிய ஒருவர் தேவை. அது ரன்வீர் சிங்கிடம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். காரணம் தனது அற்புதமான நடிப்பின் மூலம் இரு பாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர் ரன்வீர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இந்த சக்திவாய்ந்த கதை அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]Shankar announces #Anniyan Remake in Hindi with #RanveerSingh. Produced by Dr Jayantilal Gada of #PenStudios. Starts mid-2022. pic.twitter.com/BGPYAG8hXx
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) April 14, 2021