சென்னை:  தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பொன்னாரிடம் பெண் ஒருவரி கூறிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மீனாட்சி அம்மனை தரிசிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.

அவர் கோவில் வளாகத்தில் வந்துகொண்டிருந்தபோது, இடைமறித்து வண்ணம் தெரிவித்த பெண் ஒருவர்,  ஸ்டாலின்தான் முதலமைச்சர், மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டுதான் வரேன் கூறினார்.

திடீரென அந்த பெண்  ஸ்டாலின்தான் முதலமைச்சர் என கூறிய பொன்னாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.