சென்னை: மும்பைக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

இதனையடுத்து, தற்போது மும்பை அணி களமிறங்கியுள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களுள் ஒருவரான குவின்டன் டி காக், 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியிலும் இவர் டக்அவுட்.

தற்போது, கேப்டன் ரோகித்துடன் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். தற்போது, 4.2 ஓவர்களில், 1 விக்கெட்டை இழந்து 29 ரன்களை சேர்த்துள்ளது மும்பை அணி. இதற்கு முன்னர், இந்த அணி, பெங்களூருவுடன் மோதிய லீக் போட்டியில் தோல்வியடைந்தது. கடந்தப் போட்டியில் விளையாடிய அதே மும்பை அணிதான் இப்போதும் ஆடுகிறது.

கொல்கத்தா அணி, தனது முதல் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை வென்றிருந்தது. தற்போது இயன் மோர்கன் தலைமையில் மும்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.