சென்னை: தமிழகஅரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், பெரியார் ஈ.வே.ரா சாலை என்பது கைவிடப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், பெரியார் ஈவேரா சாலை என்று இருந்த நிலையில், தற்போது வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில், கிரான்ட் வெஸ்டடர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பராமரிப்பு மற்றும், சாலைகள் பட்டியலிலும் பெரியார் ஈ.வே.சாலை என்ற பெயர் அகற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகஅரசு திட்டமிட்டு பெரியார் புகழை அழிக்கும் முயற்சியில் பாஜகவின் ஏவல்துறையாக செயல்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel