கும்பகோணம்:
கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவருமான 65 வயதான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் தொகுதியில், அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 6 முறை காங்கிரஸ், 6 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுகவின் கோ.சி. மணியும், 2011 தேர்தலில் திமுகவின் சாக்கோட்டை க. அன்பழகனும் வெற்றி பெற்றள்ளனர்.

இந்நிலையில், கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவருமான 65 வயதான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.