மும்பை: டெல்லிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், சென்னை அணி 10 ஓவர்களில் 71 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அதேசமயம், 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தற்போது சுரேஷ் ரெய்னாவும், அம்பாதி ராயுடுவும் ஆடி வருகின்றனர். முன்னதாக, துவக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்களுக்கும், டூ பிளசிஸ் டக்அவுட்டும் ஆனபோது, சென்னை அணி 7 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பின்னர், மொயின் அலி களத்திற்கு வந்து சற்று அதிரடி காட்டினார். 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்தபோது அவர் அவுட்டானார்.

அதன்பிறகு, சென்னை அணியின் ரன் விகிதம் அப்படியே குறையத் தொடங்கியது. இதனையடுத்து, 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 10 ஓவர்களில், 71 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது சென்னை அணி.