சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா  கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன.

தமிழகத்தில்  கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதனால், தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்த, தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் கூடுதல் கட்டுப்பாடுகளைய அறிவித்துள்ளார். அந்த நடைமுறைகளி இன்று  சனிக்கிழமை (ஏப். 10) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

அதனப்டி, திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்;

பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை;

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிகள் செல்வதற்கான வரையறைகள்;

உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும்

முகக் கவசம் அணியாவிட்டாலோ, பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அபராதம் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகங்கள் எடுத்துள்ளன.

[youtube-feed feed=1]