சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி, 13 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியின் கிறிஸ் லின் 1 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களை அடித்து, வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டானார்.

சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 31 ரன்களை அடித்து அவுட்டானார். தற்போதைய நிலையில், இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் களத்தில் உள்ளனர்.

பெங்களூரு தரப்பில், இதுவரை மொத்தமாக 7 பெளலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை அணியின் ரன்ரேட் சிறிது சரிந்துள்ள நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் அந்த அணி அதிரடியாக ஆடினால் ஒழிய, 200 ரன்களைத் தொடுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

 

 

 

[youtube-feed feed=1]