சென்னை: 14வது ஐபிஎல் முதல் போட்டியில், மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, 19 ரன்கள் எடுத்திருந்தபோது, பெங்களூரு கேப்டன் விராத் கோலியால் எதிர்பாராதவிதமாக ரன்அவுட் செய்யப்பட்டார்.
டாஸ் தோற்று பேட்டிங் பணிக்கப்பட்ட மும்பை அணியின் துவக்க வீரராக களம் கண்டார் கேப்டன் ரோகித். அவர், துவக்கத்தில் சற்று நிதானமாகவே ஆடத் தொடங்கினார்.
மொத்தம் 15 பந்துகளை எதிர்கொண்ட அவர், 1 சிக்ஸர் & 1 பவுண்டரி அடித்து, 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலியால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனால், மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சற்று நிலைத்துவிட்டால், பெரிய ரன்களை அடித்துவிடுவார் ரோகித் என்ற நிலையில், அவர் ரன்அவுட் ஆனது, பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பது இனிதான் தெரியவரும்.
[youtube-feed feed=1]