டில்லி
இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9,587 கர்நாடகாவில் 7,955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 10,48,085 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,813 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.
இன்று 3,220 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 9,77,169 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,084 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 9,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 6,63,991 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 36 பேர் உயிர் இழந்து இதுவரை 9,039 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 583 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,06,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 48,306 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.