புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழசை அறிவித்து உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரு வாரத்தில் மட்டும் 2304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹோட்டல் சங்கத்தினருக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில்வ கொரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நிலை இல்லை. கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனாவை வெல்வோம்” என்றார். பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது,
புதுச்சேரியில் கொரோனா தொற்று நூறு சதவீதம் கரோனாவை கட்டுப்படுத்த நூறு இடங்களில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி வரும் 11 முதல் 14 வரை நடைபெறும்.
புதுச்சேரியில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் முககவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
முககவசம் அணியாவிட்டால் கடைகளில், மால்களில் அனுமதிக்கக்கூடாது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அனைத்து நிகழ்வுகளிலும் இருக்கைகளில் 50 சதவீதத்தினரை மட்டும் அனுமதிக்கவேண்டும்.
திருக்கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
இரவு 12 முதல் காலை 5 வரை கரோனா கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருக்கும்.
பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை.
ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்
இவ்வாறு கூறினார்.