மும்பை

பிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த வருடத்துக்கான 14 ஆவது ஐபிஎல் போட்டிகள் நாளை அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க உள்ளது.  வரும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் முடிவடைகிறது.

சென்னையில் நாளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகின்றன.  அதன் பிறகு இந்த போட்டிகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், டில்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.  தற்போது கொரோனா பரவல் அதி8கரித்து வருவதால் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் மிகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா  பரவலில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் மும்பை நகரில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10000க்கும் மேல் உள்ளது.  எனவே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

போட்டிகளில் கலந்துக் கொள்ள வரும் கிரிக்கெட் வீரர்களைக் காண மைதானத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.   எனவே போட்டிகளை இங்கு நடத்த வேண்டாம் என அங்குள்ள மக்கள் முதல்வருக்குக் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்களில் ஒருவர், “ மாநில அரசு திருமணங்கள், இறப்புகள், மத மற்றும் பிற சமூக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நிர்ப்பந்திக்கிறது,  ஆனால், இந்த கடினமான காலங்களில், பல நாட்கள் நீடிக்கும் இத்தகைய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனுமதிக்கப்படுகின்றன,  எனவே போட்டிகளை வசிப்பிட பகுதி இல்லாத ஒரு இடத்தில் நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

இந்நிலையில் வான்கடே மைதான பணியாளர்களில் 11 பேருக்கும், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உள்ள குழுவில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.