
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், வெற்றி இலக்காக 321 ரன்களை நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.
ஏற்கனவே, நடைபெற்ற 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்ற நிலையில், கோப்பைக்கான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ஃபக்கர் ஸமான் இன்றும் அசத்தினார். அவர், 104 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அவுட்டானார்.
துவக்க வீரர் இமாம் உல் ஹக், 57 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் பாபர் ஆஸம் 82 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். ஹசன் அலி 11 பந்துகளில் 32 ரன்களை அடிக்க, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து, பாகிஸ்தான் அணி 320 ரன்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும், மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
[youtube-feed feed=1]