பெங்களூரு

ர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முழு அளவு பேருந்து சேவையைக் கர்நாடக மாநில சாலை  போக்குவரத்துக் கழகம் நடத்தி வருகிறது.   இந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வெகு நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வைத்துள்ளனர்.  நிர்வாகம் அதை ஒப்புக் கொள்ளாமல் இருந்துள்ளது.

இதையொட்டி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது.  ஆயினும் ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை.  எனவே இன்று முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைக் கர்நாடகா மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளனர்.

இதனால் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பேருந்து போக்குவரத்து அடியோடு நின்று போனது.  பெங்களூரு நகரில் மிகவும் பரபரப்பான மெஜஸ்டிக் சர்க்கிள் பேருந்து நிலையம் கூட்டமின்மையால் வெறிச்சோடிக் கிடக்கிறது.   தனியார் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளதால் சாலையில் ஓரிரு பேருந்துகள் காணப்படுகின்றன