சென்னை: சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை மற்றும் தாமரைக்கு செல்வதாக புகார் எழுந்தது.
சில இடங்களில் வாக்கு பதிவானதா என்பதை உறுதி செய்யும் விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இந் நிலையில் சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றவர் பிடிபட்டார்.
பிடிபட்ட நபரை போலீசாரிடம் அங்குள்ளவர்கள் ஒப்படைத்தனர். முன்னதாக வேளச்சேரி தொகுதியில் வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாக புகார் எழுந்தது.
[youtube-feed feed=1]