2015-ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன் ஹாத்வே நடித்த படம் ’தி இண்டர்ன்’.
கிட்டத்தட்ட 194 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் பாராட்டுகளைப் பெற்றனர். இதில் பயிற்சி பெறும் முதியவராக ராபர்ட் டி நிரோவும், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆன் ஹாத்வேவும் நடித்திருந்தனர்.
’தி இண்டெர்ன்’ ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு வெளியாகியுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், தீபிகா படுகோனின் கா தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்குகிறார். 2022 கோடையில் படம் வெளியாகு என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.