சென்னை: நாளை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பெரும்பாலானவர்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கவில்லை. இதனால், அவர்களால் வாக்குச்சாவடி எங்கு என்பதை அறிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நமது வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள EPIC xxxxxxx எண்ணைக்கொண்டு, நமது வாக்குச்சாவடியையும், பூத் சிலிப்பையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதற்கான இணையதள முகவரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளதால், பலருக்கு வாக்குச்சாவடி எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், புதிய தலைமுறை வாக்காளர்களும், வீடு மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களும், தங்களது வாக்குச்சாவடி எங்கு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
https://electoralsearch.in/ என்ற இணையதளத்தில் சென்று உங்களது விவரங்களை அளித்து வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளலாம். இதில், பெயர், வயது, மாவட்டம், பேரவைத் தொகுதி ஆகியவற்றை வாக்காளர் பதிவு செய்தால் போதும், அவர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் முழு முகவரியும் தெரிய வரும். இதற்கு வாக்காளர் அடையாள எண் தேவையில்லை.
வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள், அதில் உள்ள எண்ணைக்கொண்டு எளிதில் நமது வாக்குச்சாவடியையும், பூத் சிலிப்பையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.