நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இன்றைய நிலைமையில் எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தெரிகின்றன. ஆனாலும் பரவாயில்லாமல் இருக்கிறேன். மருத்துவர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பரிந்துரைத்த விதிகளை கடைப்பிடித்து வருகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிகபட்ச எச்சரிக்கையை நான் கடைப்பிடித்தும் கூட இந்த வைரஸ் தொற்று என்னை பாதித்துள்ளது. முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை கழுவுங்கள். சமூக விலகலை கடைப்பிடியுங்கள் மற்றும் பொதுவான நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CNRc8BsBe41/