பாலிவுட்டில் 70-களில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஜவால்கர். அவருக்கு வயது 88.

திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சசிகலா ஜவால்கர். 2007-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏப்ரல் 4-ம் தேதி மதியம் சசிகலாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.